செய்திகள்

இதிகாசத்தில்கூட இப்படியொரு தாயைப் பார்த்திருக்க முடியாது: நடிகர் சூரி உருக்கம்

இந்தப் பெரும் பணியைச் செய்வார் எனத் தெரிந்துதான் அற்புதம்மாள் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

DIN

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏ.ஜி. பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரது மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இந்நிலையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் குறித்து நடிகர் சூரி ட்விட்டரில் தெரிவித்ததாவது:

பத்து மாதம் வயிற்றில் சுமந்த தாய் நமக்குத் தெய்வம். 31 வருடங்களாகப் பெற்ற மகனுக்காகப் பாரம் சுமந்த தாய். இதிகாசத்தில்கூட இப்படியொரு தாயைப் பார்த்திருக்க முடியாது. இந்தப் பெரும் பணியைச் செய்வார் எனத் தெரிந்துதான் அற்புதம்மாள் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். அற்புதம் அம்மா என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT