முகப்பு
செய்திகள்

கார்த்திக்குப் போட்டியாகக் களமிறங்கும் சிவகார்த்திகேயன்: வந்தது அடுத்த அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயனின் 20-வது திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என அந்தப் படக் குழு அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:


நடிகர் சிவகார்த்திகேயனின் 20-வது திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என அந்தப் படக் குழு அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் 20-வது திரைப்படத்துக்கு தற்காலிகமாக எஸ்கே 20 எனப் பெயரிடப்பட்டுள்ளது. அனுதீப் கேவி படத்தை இயக்குகிறார், தமன் இசையமைக்கிறார். இதில் மரியா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டான் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்தப் படக் குழு, எஸ்கே 20 குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகவுள்ளதாகப் படக் குழு அறிவித்துள்ளது.

கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், கார்த்தியுடன் சிவகார்த்திகேயன் மோதவுள்ளது உறுதியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →