செய்திகள்

வாரிசு படத்தின் முதல் பாடல் எப்போது? அறிவிப்பு

வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

வாரிசு படத்தின் முதல் பாடல் புரோமோ வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். 

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஷாம், சரத்குமார், குஷ்பு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைப்பில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘வாரிசு’ திரைப்படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமம் ஆகியவை ரூ.180 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. படம் பொங்கலுக்கு வெளியாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT