முகப்பு
செய்திகள்

’லவ் டுடே’ திரையரங்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தின் திரையரங்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:47 AM
பகிர்:

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தின் திரையரங்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனா நடித்துள்ளார்.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார்.  சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், அனைத்துத் தரப்பினரிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதால் ‘லவ் டுடே’ திரைப்படத்தின் திரையரங்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் மட்டுமல்லாது சிங்கபூரிலும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்,

முழு கட்டுரையைப் படிக்க →