செய்திகள்

விரைவில் ’அன்பே சிவம் - 2’?

அன்பே சிவம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி பேசியுள்ளார்.

DIN

அன்பே சிவம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி பேசியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் திரைக்கதையில் சுந்தர்.சி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற திரைப்படம் அன்பே சிவம்.

நல்லசிவம் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் கமல்ஹாசன் இடதுசாரி சிந்தனையாளராக நடித்திருந்தார்.

இப்படம் ஜாதி, மத அரசியல்களைக் கேள்வியெழுப்பி இறுதியில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்பதை பேசியிருந்தது.

தற்போது, இப்படம் இன்றைய தலைமுறை ரசிகர்களிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சியிடம் அவர் படங்களில் மீண்டும் எதனுடைய இரண்டாம் பாகத்தை இயக்க விருப்பப்படுகிறீர்கள்? எனக் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு சுந்தர்.சி  “அன்பே சிவம் கிளைமேக்ஸ் காட்சியில் மழையில் நனைந்தபடி நல்லா(கமல்ஹாசன்) சென்றுகொண்டிருப்பார். அவரின் அடுத்தகட்ட பயணம் எப்படியிருக்கும் என ஒரு யோசனை உள்ளது. கமல்ஹாசன் ஒப்புக்கொண்டால் நான் அன்பே சிவம் படத்தின் இரண்டாம் பாகத்தை கண்டிப்பாக இயக்குவேன்” எனத் தெரிவித்துள்ளார்.  

முன்னதாக, தன் படங்களான அரண்மனை, கலகலப்பு ஆகியவற்றின் இரண்டாம் பாகங்களை சுந்தர்.சி இயக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT