செய்திகள்

ஆடை சர்ச்சை: தர்ஷா குப்தா ஆவேசம்

ஆடை சர்ச்சை குறித்து நடிகை தர்ஷா குப்தா மறுப்பு தெரிவித்தது  இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. ஏற்கனவே ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்துள்ளார். 

ஓ மை கோஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நகைச்சுவை நடிகர், “வெளிநாட்டைச் சேர்ந்த சன்னிலியோன் புடவையில் வந்திருக்கிறார். நம்மூர் தர்ஷா குப்தா மாடர்ன் உடையில் வந்திருக்கிறார். சன்னிலியோனை விடவும் கவர்ச்சியாக வருவதாக தர்ஷா ஏற்கனவே கூறியிருந்தார்” என மேடையில் சதீஷ் கூறினார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே விடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டார். அந்த விடியோவில் தர்ஷா குப்தா சன்னிலியோனை விடவும் கவர்ச்சியாக வருவதாக என்னிடம் கூறியதை மேடையில் கூறிவிட்டேன். இனிமேல் அப்படி சொல்லமாட்டேன்” என தெரிவித்திருந்தார். 

இதற்கு தர்ஷா குப்தா, “இதை நானா மேடையில் சொல்ல சொன்னேன். பிரச்சினையை என் பக்கம் திருப்பி விடுவது சரியா? யாராவாது என்ன பத்தி மேடையில் நீங்க அசிங்கமா பேசுங்கனு சொல்வாங்களா? எனக்கும் அன்னைக்கு அவ்ளோ கஷ்டமா இருந்துச்சி, ஆனால் நான் அதை பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இப்போ இப்படி சொல்றது சரியில்லை” என கூறியிருந்தார். 

இதனால் பலரும் சமூக வலைதளங்களில் நடிகர் சதீஷை கேள்வி எழுப்பியும் கிண்டல் செய்தும் வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

SCROLL FOR NEXT