சசிகுமார் இயக்கத்தில் புதிய படம்!
நடிகரும் இயக்குநருமான சசிகுமார் மீண்டும் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடிகரும் இயக்குநருமான சசிகுமார் மீண்டும் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சசிகுமார் நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய், காரி போன்ற படங்கள் தயாராகி வருகின்றன.
மேலும், அவர் நடிப்பில் உருவான ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் நாளை(நவ.18) வெளியாகவுள்ளது.
Advertisement
கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: ”எல்லாம் ரெட் ஜெயன்ட் வேலை..” வாரிசு படத்தை ஓரங்கட்டும் துணிவு!
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சசிகுமார், ‘நீண்ட நாள்களுக்குப் பின் நான் மீண்டும் புதிய படத்தை இயக்க உள்ளேன். இதில், நான் நடிக்கவில்லை. வேறு பிரபலங்கள் நடிக்கிறார்கள். நடிகர் ரஜினியுடன் நடித்துவிட்டேன். மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். என் நடிப்பில் உருவான ‘நான் மிருகமாய் மாற’ , ‘காரி’ உள்ளிட்ட படங்கள் ஒருவார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. ஒரு இடைவெளியுடன் வெளியாகியிருக்காலம். ஆனால், தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட ஈகோ காரணமாக இரண்டும் வெளியாகிறது. அவை வெற்றி பெற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
சசிகுமார் இயக்கத்தில் இறுதியாக கடந்த 2010 ஆம் ஆண்டு ‘ஈசன்’ படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.