முகப்பு
செய்திகள்

டிமாண்டி காலனி 2 படப்பிடிப்பு தொடக்கம்

திகில் படமான டிமாண்டி காலனி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:50 PM
பகிர்:

திகில் படமான டிமாண்டி காலனி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிமாண்டி காலனி 2 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.