கோப்புப்படம் 
செய்திகள்

புதிய மும்மொழிப் படத்தில் தனுஷ்!

நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ள மும்மொழிப் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ள மும்மொழிப் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்களில் வெளியாக உள்ளது. தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

‘கேப்டன் மில்லர்’ திரைப்படப் பணிகள் டிசம்பர் மாதம் நிறைவுடையும் நிலையில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜேந்திரபாலாஜி மீதான பண மோசடி வழக்கு: குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

ராஜாசாப் புதிய வெளியீட்டுத் தேதி!

நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT