செய்திகள்

பழைய ஆண் நண்பர்களுடன் இன்னமும் நட்பா? ராஷ்மிகா மந்தனா அதிரடி!

தன்னுடைய முன்னாள் ஆண் நண்பர்களுடன் இன்னமும் நல்ல நட்பில்தான்   இருக்கிறேன் என்று அதிரடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

DIN

தன்னுடைய முன்னாள் ஆண் நண்பர்களுடன் இன்னமும் நல்ல நட்பில்தான்   இருக்கிறேன் என்று அதிரடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

முதன்முதலாக இவர் ஹிந்தியில் நடித்த குட்பை  திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இதையொட்டிய பேட்டியொன்றில் ஆண் நண்பர்கள் பற்றி  கருத்துத் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா, பழைய ஆண் நண்பர்களுடன் நல்ல உறவைப் பேணுவதாகத் தெரிவித்ததுடன், அவர்களுடைய இப்போதைய 'நட்பு'களையும் சங்கடமில்லாமல்தான் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவருடைய முதல் படமான கிரிக் பார்ட்டியில் (2016) சேர்ந்து நடித்தபோது, இணையாக நடித்த ரக்சித் ஷெட்டியுடன் நட்பில் இருந்தார் ராஷ்மிகா. சில ஆண்டுகளிலேயே கருத்து வேற்றுமை காரணமாகப் பிரிந்து விட்டனர்.

பிறகு 2018-ல் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் உடன் நடித்த விஜய் தேவரகொண்டாவுடன் நல்ல நட்பில் இருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் பரவிக்கொண்டிருந்தாலும் இருவருமே இதை மறுத்து வருகின்றனர்.

ஹிந்தியில் அமிதாப் பச்சன், நீனா குப்தா ஆகியோருடன் இவர் நடித்த குடும்பப் படமான குட்பை, வரும் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

மேலும் ஹிந்தியில் ரன்வீர் கபூருடன் அனிமல், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஞ்சு ஆகிய படங்களிலும் ராஷ்மிக மந்தனா இணைந்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

SCROLL FOR NEXT