செய்திகள்

வசூலில் தடுமாறும் விக்ரம் வேதா... இதுவரை இவ்வளவுதானா?

ஹிந்தி விக்ரம் வேதா படம் முதல்  வசூலில் தடுமாற்றம் அடைந்து வருகிறது.

DIN

ஹிந்தி விக்ரம் வேதா படம் முதல்  வசூலில் தடுமாற்றம் அடைந்து வருகிறது.

விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா படம் 2017-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி ஹிந்தியிலும் இயக்கியுள்ளார்கள். 

ஹிருதிக் ரோஷன், சயிஃப் அலி கான், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். செப்டம்பர் 30 அன்று இந்தப் படம் வெளியானது. 

விக்ரம் வேதா படத்தைப் பார்த்தவர்கள் நல்லவிதமாக விமர்சனம் செய்திருந்தாலும் இந்தியாவில் முதல் நாளன்று ரூ. 10.58 கோடி வசூலித்தது.  

அதன்பின் விக்ரம் வேதா படத்தை வெளியிட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முதல் மூன்று நாள்களின் வசூலை வெளியிட்டது. அதில், 2-வது நாளன்று ரூ. 12.51 கோடி, 3-வது நாளன்று ரூ. 13.85 கோடி என மொத்தமாக முதல் மூன்று நாள்களில் விக்ரம் வேதா படத்துக்கு இந்தியாவில் ரூ. 36.94 கோடி வசூல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், படம் வெளியான 5 நாள்களில் ரூ.50 கோடி வசூலை மட்டுமே எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக பாலிவுட் திரைப்படங்கள் வணிக ரீதியாக பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. ஆனால், விக்ரம் வேதா திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றும் வசூலில் திணறி வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT