பிரபல நடிகை தன்னை தனியார் நிறுவன ஊழியர் அலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ், அய்யப்பனும் கோஷியும் போன்ற படங்களில் நடித்திருந்தவர் அன்ன ராஜன். இவர் புதிய சிம் வாங்குவதற்காக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியருடன் புதிய சிம் வாங்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ஊழியர் நடிகை அன்ன ராஜனை அலுவலகத்தில் வைத்து பூட்டியதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | இதனால்தான் கமலுடனான பொன்னியின் செல்வன் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை - ஜெயம் ரவி விளக்கம்
இதனையடுத்து அன்ன ராஜன் அருகிலிருந்த காவல்நிலையத்தில் தொலைத் தொடர்பு நிறுவன ஊழியர் மீது புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.