செய்திகள்

’என்னை ஊக்கப்படுத்தும் சூப்பர் ஹீரோ...’ பிரபல நடிகர் குறித்து ரஜினிகாந்த்

தொடர்ந்து தன்னை ஊக்கப்படுத்துவதாக நடிகர் ரஜினிகாந்த் பிரபல நடிகர் குறித்து தெரிவித்துள்ளார்.

DIN

தொடர்ந்து தன்னை ஊக்கப்படுத்துவதாக நடிகர் ரஜினிகாந்த் பிரபல நடிகர் குறித்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய 'சோலே’ படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டவர்.

அதன்பின், நாயகனாக அதிகப் படங்களில் நடித்தவர் தற்போது நல்ல கதையம்சம் உள்ள படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ’பின்க்’ , ’ஜூண்ட்’ போன்ற சமூக கருத்துகளை உள்ளடக்கிய படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வரும் அமிதாப் பச்சனுக்கு இன்று 80-வது பிறந்தநாள். 

அதனால், நாடு முழுவதிலும் உள்ள அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அமிதாப் பச்சனுடன் ரஜினி

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘அவர் லெஜண்ட். என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் இந்திய சினிமாவின் சூப்பர் ஹீரோ இன்று 80-வது வயதிற்குள் நுழைகிறார். என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

புதுவை சட்டப்பேரவை இன்று கூடுகிறது

SCROLL FOR NEXT