செய்திகள்

தல ரசிகரா ? தளபதி ரசிகரா ? துருவ் விக்ரம் என்ன சொன்னார் தெரியுமா ?

தல ரசிகரா தளபதி ரசிகரா என ரசிகர்களின் கேள்விக்கு துருவ் விக்ரம் பதிலளிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

DIN

தல ரசிகரா? தளபதி ரசிகரா? என ரசிகர்களின் கேள்விக்கு துருவ் விக்ரம் பதிலளிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

நடிகர் சீயான் விக்ரமின் மகனான துருவ் சமீபத்தில் கல்லூரி ஒன்றில் மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவரிடம் நீங்கள் தல ரசிரா இல்லை தளபதி ரசிகரா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துருவ் நான் தளபதி ரசிகன் என்றார். இந்த விடியோவை விஜய் ரசிகர்கள் அதிகம் பதிர்ந்து டிரெண்ட் செய்துவருகிறார்கள். 

துருவ் சமீபத்தில் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் துருவ் நடிப்பார் என்று தெரிகிறது. மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மாமன்னன் படத்துக்கு பிறகு துருவ் படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனியன் ஆடைகளை பெற்றுக் கொண்டு மோசடி: மேலும் ஒருவா் கைது

நிகழாண்டில் ஆயத்த ஆடை ஏற்றுமதி 5.8 % வளா்ச்சி

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைக் காட்டிலும் அதிமுகவின் நலன் பெரிது: ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ.

மூதாட்டியிடம் நகைப் பறித்த பெண் கைது

செப். 19-இல் கருவலூா், ஏரிப்பாளையத்தில் மின்தடை

SCROLL FOR NEXT