செய்திகள்

வசூலில் தீபாவளி வெளியீடுகளை ஓரம்கட்டிய 'பொன்னியின் செல்வன்'

தீபாவளி வெளியீடுகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படத்துக்கு கிடைத்துள்ள வசூல் விவரங்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

DIN

தீபாவளியை முன்னிட்டு நேற்று (அக்டோபர் 21) சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் படங்கள் வெளியானது. இதில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் கார்த்தியின் சர்தார் படத்துக்கு நேர்மறை விமர்சனங்கள் வெளியாகின. 

இந்த நிலையில் இரண்டு படங்கள் மீதான மக்களின் ஆர்வம் குறைவாக இருப்பதாகவே தெரிகிறது. மற்றொருபுறம் கடந்த செப்டம்பர் 30 ஆம்  தேதி வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்துக்கு மக்களிடையே ஆர்வம் குறையவில்லை எனத் தெரிகிறது.

தீபாவளி வெளியிடுகளைத் தாண்டி நேற்று (அக்டோபர் 21) ஒருநாளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் ரூ.2 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. துவக்கத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற பொன்னியின் செல்வன் மக்கள் காட்டிய ஆர்வத்தினால் ரூ.450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 

இதனையடுத்து இரண்டாம் பாகத்துக்கு இப்பொழுதே எதிர்பார்ப்பு அதிகிரித்துவருகிறது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு சம்மரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT