செய்திகள்

“அப்போ என் திருமணம் செல்லாதா?“ தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய திரைப்பட இயக்குநர்

திருமணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தெரிவித்துள்ள கருத்து குறித்து இயக்குநர் நவீன் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN

திருமணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தெரிவித்துள்ள கருத்து குறித்து இயக்குநர் நவீன் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை சமீபத்தில் ஒரு வழக்கில் எந்த மதத்தை சேர்ந்தரவாக இருந்தாலும், அவர் சார்ந்த மதத்தின் சடங்கு, சம்பிரதாயப்படி திருமணம் நடந்தால்தான் அதனை பதிவு செய்ய முடியும்,

அவ்வாறு இல்லாமல் நேரடியாக திருமணம் நடந்தால் அதனை பதிவு செய்ய முடியாது. எந்த சடங்குகளும் நடைபெறாமல் சான்றிதழ் வழங்கினால், அது போலி திருமண சான்றிதழாகவே கருதப்படும் என கருத்து தெரிவித்திருந்தது.

இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களைப் பார்க்க முடிந்தது. அதன் ஒரு பகுதியாக 'மூடர் கூடம்' பட இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சந்தேகத்தினை தமிழக அரசிடம் கேட்டுள்ளார். 

அவரது பதிவில், ''இது பொய்யான செய்தி என்று நினைத்தேன். மதுரை உயர்நீதிமன்றம் இப்படி சொல்லியிருப்பதை நம்பமுடியவில்லை. அப்படியானால் 1968 அண்ணா அமல்படுத்திய சுயமரியாதை திருமண சட்டத்தின் நிலை என்ன? சட்டப்படி பதிவு திருமணம் (மதச்சடங்குகளின்றி) செய்த என் போன்றோர் திருமணம் செல்லுமா செல்லாதா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT