படம்: இன்ஸ்டாகிராம் | விக்னேஷ் சிவன் 
செய்திகள்

இரட்டைக் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன நயன்தாரா! (விடியோ)

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

DIN


விக்னேஷ் சிவன் - நயன்தாரா தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் பிறந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், இதுபற்றி விசாரிக்க சுகாதாரத் துறை சார்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் இன்று (திங்கள்கிழமை) தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப் பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த விடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தைகள் பிறந்தவுடன் வெளியிடப்படும் முதல் விடியோ இது என்பதால், சமூக ஊடகங்களில் இது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT