செய்திகள்

'கோப்ரா' படத்தில் இந்தக் காட்சி காப்பியடிக்கப்பட்டதா? வைரலாகும் விடியோ

கோப்ரா படக் காட்சி ஒன்று காப்பியடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் விடியோ ஒன்று வைரலாகிவருகிறது. 

DIN

கோப்ரா படக் காட்சி ஒன்று காப்பியடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் விடியோ ஒன்று வைரலாகிவருகிறது. 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள கோப்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. 

கடைசியாக விக்ரம் நடிப்பில் கடாராம் கொண்டான் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. 3 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் விக்ரமின் படம் என்பதால், கோப்ரா படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். அவர்களது எதிர்பார்ப்பை கோப்ரா பூர்த்தி செய்யவில்லை என்றே கூறப்படுகிறது. 

இந்தப் படத்தில் விசாரணைக் காட்சி ஒன்றில் நடிகர் விக்ரமின் நடிப்பு விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. அந்தக் காட்சியில் ஆனந்தராஜ் உள்ளிட்ட  பலரது  உடல்மொழியை விக்ரம் மாற்றி மாற்றி பேசி கலக்கியிருப்பார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில்  இந்தக் காட்சி காப்பியடிக்கப்பட்டதாக விடியோ ஒன்று வைரலாகிவருகிறது. இன்சைட் என்ற குறும்படத்தில் இடம்பெற்ற அந்த காட்சியிலும் நடிகர் தன்னை சுற்றி உள்ள நபர்களைப் போல உடல் மொழியை மாற்றி மாற்றி பேசுகிறார். தற்போது இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகிவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் பேட்டிங்!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்!

இசையில் தொடங்கலாம்... நூர் மதரு!

நெய், பன்னீர் மற்றும் பால் விலைகளை குறைத்த மதர் டெய்ரி!

சிறப்பான சம்பவம்... ஐஸ்வர்யா!

SCROLL FOR NEXT