செய்திகள்

நடிகர் அஜித்குமாருடன் இணைந்த மஞ்சு வாரியர்

நடிகர் அஜித் குமாருடன் நடிகை மஞ்சு வாரியர் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

DIN

நடிகர் அஜித் குமாருடன் நடிகை மஞ்சு வாரியர் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

நடிகர் அஜித்குமார் திரைத்துறை தவிர மற்ற துறைகளிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். துப்பாக்கிச் சுடுதல், சிறிய வகை ஹெலிகாப்டர் உருவாக்கம், வாகனப் பந்தயம் என பல செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

அவ்வப்போது தன்னுடைய வாகனத்தில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டு வரும் அஜித்குமாரின் புகைப்படங்கள் இணையத்தில் சமீப காலங்களில் அதிகம் வெளியாகி வருகிறது. 

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் அஜித்குமாரின் வாகனப் பயணத்தில் இணைந்துள்ள படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. லடாக் பகுதியில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தப் படங்களை அஜித்குமாரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

நடிகை மஞ்சுவாரியர் நடித்த அசுரன் திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT