செய்திகள்

வெளியானது ’வெந்து தணிந்தது காடு’ டிரைலர்

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா என இரண்டு வெற்றிகளுக்கு பிறகு 3வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்திருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. 

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.

முன்னதாக, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் ‘டப்பிங்’ பணிகள் முடிவடைந்திருந்ததைத் தொடர்ந்து  அப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது மீதமுள்ள 2 பாடல்களும் டிரைலரும் வெளியாகியுள்ளது.

ஏழ்மையின் காரணமாக மும்பைக்குப் பிழைக்கப் போகும் முத்து(சிம்பு) எதிர்கொள்ளும் பிரச்னைகளும் சவால்களுமாக உருவாகியுள்ள  ’வெந்து தணிந்தது காடு’ வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT