செய்திகள்

'வேட்டையாடு விளையாடு 2': கமலுக்கு வாக்குறுதி அளித்த கௌதம் மேனன்

வேட்டையாடு விளையாடு 2 படம் குறித்து கமலுக்கு கௌதம் மேனன் அளித்த பதில் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. 

DIN

வேட்டையாடு விளையாடு 2 படம் குறித்து கமலுக்கு கௌதம் மேனன் அளித்த பதில் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. 

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

விழாவில் பேசிய கமல்ஹாசனிடம் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த கமல்ஹாசன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே என் சம்மதத்தை இயக்குநர் கௌதம் மேனனிடம் தெரிவித்துவிட்டேன். கதைக்காக நான் காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார். 

உடனடியாக மேடையேறிய இயக்குநர் கௌதம் மேனன், ஜெயமோகன் தற்போது  கதை எழுதிக்கொண்டிருக்கிறார். விரைவில் அது உங்களது கைகளில் வந்தடையும் சார் என விளக்கமளித்தார். 

வேட்டையாடு விளையாடு கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்பொழுது லோகேஷ் விக்ரம் படத்தில் கமலை ரசித்து படமாக்கியது போல, ஒரு ரசிகராக கமலின் மாஸ் காட்சிகளை இயக்குநர் கௌதம் மேனன் வடிவமைத்திருப்பார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

SCROLL FOR NEXT