இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவரது உடல் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் 2, 3 நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | விக்ரமின் 'கோப்ரா'வின் நிலை சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்துக்கு ஏற்படுமா ?
முழு நேர நடிகராக மாறியிருக்கும் பாரதிராஜா நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
தற்போது பாரதிராஜா சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், பாரதிராஜா அப்பாவை மருத்துவமனையில் சந்தித்து பேசினேன். இம்மாத இறுதியில் எங்களின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதாக கூறினார். மீண்டும் பாரதிராஜா அப்பாவுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.