செய்திகள்

வெளியானது பொன்னியின் செல்வன் டிரைலர்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.  

DIN

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனைத் தொடர்ந்து படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படத்தின் டிரைலர் மற்றும பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக பங்கேற்று டிரைலரை வெளியிட்டனர்.

தமிழில் வெளியான டிரைலருக்கு கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இதுதவிர மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டிரைலர் வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT