செய்திகள்

நடிகர் கமல் குறித்து ஒற்றை வார்த்தையில் பதிவிட்ட ரன்வீர் சிங் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்

நடிகர் கமல்ஹாசன் குறித்து ரன்வீர் சிங் பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN


நடிகர் கமல்ஹாசன் குறித்து ரன்வீர் சிங் பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு விருதுகளை அள்ளினர்.

தமிழக அளவில் நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்த ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் அவரிடம் ஆசி பெற்றார். 

பின்பு அவருடன் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து 'தி ஐகான்' என குறிப்பிட்டுள்ளார். மேலும் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிட்வா புயலால் கனமழை - புகைப்படங்கள்

கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்: ‘பாஜகவின் அரசியல் விளையாட்டு’ -ஆளும் கம்யூ. விமர்சனம்

ரெட் அலர்ட்... சனம் ஷெட்டி!

கண் காணா அழகு... நபா நடேஷ்!

ஹலோ டிசம்பர்... அஞ்சு குரியன்!

SCROLL FOR NEXT