செய்திகள்

‘படம் பார்ப்பதற்கு முன்...’ ரசிகர்களுக்கு கௌதம் மேனன் கோரிக்கை

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் அதிகாலைக் காட்சியைக் காணவரும் ரசிகர்களுக்கு இயக்குநர் கௌதம் மேனன் கோரிக்கை வைத்துள்ளார்.

DIN

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் அதிகாலைக் காட்சியைக் காணவரும் ரசிகர்களுக்கு இயக்குநர் கௌதம் மேனன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா என இரண்டு வெற்றிகளுக்கு பிறகு 3-வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்திருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. 

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.

முன்னதாக, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி 2 கோடி பார்வைகளைக் கடந்து பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் விவரணைக் காட்சிகள் நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்பதால்  அதிகாலை காட்சியைப் பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக தூங்கிவிட்டு திரையரங்கம் வர வேண்டும் என இயக்குநர்  கௌதம் வாசுதேவ மேனன் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஆனால், விமர்சகர்கள் இணையத்தில் இதைக் கிண்டல் செய்து வருகிறார்கள்.

ஏழ்மையின் காரணமாக மும்பைக்குப் பிழைக்கப் போகும் முத்து(சிம்பு) எதிர்கொள்ளும் பிரச்னைகளும் சவால்களுமாக உருவாகியுள்ள  ’வெந்து தணிந்தது காடு’ நாளை (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT