செய்திகள்

''இறங்கி செய்யலாம்னு தோணுது'' - ப்ளூ சட்டை மாறன் குறித்து கௌதம் மேனன் அதிரடி

DIN

வெந்து தணிந்தது காடு படத்துக்கு மாறன் அளித்துள்ள விமர்சனம் குறித்து கோபமாக பதிவு செய்துள்ளார். 

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படம் கடந்த 18 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. படம் மெதுவாக நகர்வதாக ஒரு சிலர் கருத்து கூறி வருகின்றனர். 

அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் 'வெந்து தணிந்தது காடு' படத்தைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில்  செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கௌதம் மேனன் ப்ளூ சட்டை மாறன் மீதான தனது கோபத்தைப் பதிவுசெய்துள்ளார். 

கௌதம் மேனன் பேசியதாவது, ''சொல்லக்கூடாதுனு நினைக்கிறேன். எனக்கு பயங்கர கடுப்பு. ஒரு படத்தை கலாய்த்து விமர்சனம் செய்வது, அவரது யூடியூப் பக்கத்தில் நிறைய பார்வையாளர்கள் பார்ப்பதற்கும், அதன் மூலம் அவருக்கு நிறைய விளம்பரங்கள் கிடைப்பதற்காகவும்தான். 

நீங்கள் விமர்சனம் பண்ணுங்கள். ஆனால் படத்தை கலாய்க்காமல் பண்ணுங்கள். அவருடைய திருச்சிற்றம்பலம் விமர்சனமே படத்தை முதல் 10 நிமிடங்கள் கழுவி ஊற்றுகிறார். நடுவில் ஒரு இடத்தில் படம் நன்றாக இருக்கிறது என்கிறார். அவர் மீது இறங்கி எதாவது செய்யலாமா என்ற அளவுக்கு கோபம் வருது'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT