செய்திகள்

உடல் மாறலாம், உறுதி மாறாது! குழந்தை பிறப்புக்குப் பிறகு களமிறங்கிய காஜல் அகர்வால்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகி வரும் ’இந்தியன் -2’ திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார்.

DIN

நமது உடல் மாறலாம் ஆனால் லட்சியத்தின் மீதுள்ள உறுதித்தன்மை மாறாமல் இருந்தால் போதும் எந்த இலக்கையும் அடையலாம் என நடிகை காஜல் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகி வரும் ’இந்தியன் -2’ திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஆண் குழந்தைக்கு தாயான நடிகை காஜல் அகர்வால், பிரசவத்திற்கு பிறகான நான்கு மாதங்கள் ஓய்வுக்கு பின் இன்று முதல் இந்தியன் -2 படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

இது குறித்து இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டுள்ள அவர், பிரசவத்திற்கு பிறகு நமது உடல் மாறலாம் ஆனால், லட்சியத்தின் மீது கொண்ட உறுதித்தன்மை மாறாமல் இருந்தால் போதும் இலக்கை அடையலாம் என நம்பிக்கையூட்டும் விதமாக பதிவிட்டுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ''பிரசவத்திற்கு பின், நான்கு மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு தற்போது படப்பிடிப்பு தளத்துக்கு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்குவதைப் போன்று உணர்கிறேன். என் உடல் முன்பு இருந்ததைப் போன்று இல்லை. குழந்தை பிறப்புக்கு முன்பு என்னால் நீண்ட நேரம் உடலுழைப்பை செலுத்த முடிந்தது. 

குழந்தைப் பிறப்புக்கு பிறகு அதே ஆற்றலுடன் பணிபுரிவது கடினமானது. தனியாக குதிரையோட்டுவது பெரிய சவலாக உள்ளது. தற்காப்புக் கலை பயிற்சியை ஆரம்பம் முதலே எடுத்து வந்தது தற்போது உதவுகிறது. 

நமது உடல் மாறலாம் ஆனால் தடுக்க முடியாத உறுதித்தன்மையும் இலக்கும் மாற வேண்டியதில்லை. நாம் நாள்தோறும் நம்மை நிரூபிப்பதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைப் பொறுத்ததுதான் அது. அது எந்த முடிவாக இருந்தாலும் தயக்கம் கொள்ளத் தேவையில்லை எனப் பதிவிட்டுள்ளார். 

சினிமாத் துறையில் ஒரு சிறு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் என்னை மேம்படுத்திக்கொள்வதற்காகவும், கற்றுக்கொள்வதற்காகவும் என்னை அனுமதிக்கும் என் வீட்டிற்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை கோரி மனு: கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மொபட்-காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.35 கோடி

கம்போடியாவில் தவிக்கும் மகனை மீட்கக் கோரி தாய் வழக்கு: வெளியுறவுத் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

அரசுப் போட்டித் தோ்வு கலந்தாய்வு: அருந்ததியருக்கு கூடுதல் வாய்ப்பு

SCROLL FOR NEXT