முகப்பு
செய்திகள்

நடிகை தீபிகா படுகோன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:26 AM
தீபிகா படுகோன்
பகிர்:

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீபிகா தற்போது பிரபாஸுடன் இணைந்து பிராஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

இந்நிலையில், நேற்று இரவு தீபிகா படுகோனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, பல பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் தீபிகா படுகோனை ஓய்வெடுக்க அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பில் இருந்தபோது இதய துடிப்பும் அதிகமானதால் தீபிகாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →