வெறும் ரூ.76 பணத்துக்காக ஜப்தியாகும் விஜய்யின் தந்தை வீடு
விஜய்யின் தந்தை வீடு ரூ.76 பணத்துக்காக ஜப்தி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் தந்தை வீடு ரூ.76 பணத்துக்காக ஜப்தி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்கிய சட்டப்படி குற்றம் படத்தை விளம்பரம் செய்தவற்காக சரவணன் என்பவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் ஒப்பந்தப்படி விளம்பரத்திற்கான பணத்தை அவர் தரவில்லை எனக் கூறி சரவணன் என்பவர் நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு தொடுத்திருந்தார்.
Advertisement
Advertisement
வழக்கை விசாரித்த நீதிமன்றம் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பணத்தை செலுத்த உத்தரவிட்டது. இருப்பினும் பணத்தை செலுத்தாத எஸ்.ஏ.சியின் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் அலுவலகமாக இருக்கும் வீடு தான் விஜய் சிறு வயதில் வசித்த வீடு. விஜய் தற்போது கோடிக்கணக்கில் ஊதியம் பெறும்போது தனது தந்தையின் வீடு ஜப்தி செய்யப்படுவதை அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.