சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டதற்கு கங்கனா ரணாவத் கண்டனம்
மும்பையில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் தாக்கப்பட்டதற்கு நடிகை கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மும்பையில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் தாக்கப்பட்டதற்கு நடிகை கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி எழுதி 1988-இல் வெளியிட்ட 4-ஆவது நாவல் ‘தி சடானிக் வோ்ஸஸ்’. இந்தப் புத்தகம், இஸ்ஸாமியரை புண்படச் செய்ததாக கூறி, அவருக்கு எதிராக ஈரானின் அப்போதைய தலைமை மதகுரு அயதுல்லா கொமேனி ஃபத்வா ஆணை பிறப்பித்தாா். அவரது தலைக்கு 3 மில்லியன் டாலா் விலை அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, பிரிட்டன் அரசின் பாதுகாப்பில் ருஷ்டி 9 ஆண்டு காலம் தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வந்தாா்.
இதையும் படிக்க: வெளிநாட்டு டி20 போட்டிகளில் தோனி பயிற்சியாளராக செயல்பட முடியாது: பிசிசிஐ
Advertisement
Advertisement
நியூயாா்க் மாகாணம், ஷடாக்குவாவில் நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கு ஒன்றில் சல்மான் ருஷ்டி பங்கேற்றபோது, மேடையில் மா்ம நபரால் கத்தியால் தாக்கப்பட்டாா். இந்தத் தாக்குதலில் ருஷ்டி கழுத்தில் காயமடைந்தாா். தற்போது அவருக்கு கண்பார்வை பறிபோகும் அபாயமும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பா.ரஞ்சித் படத்துக்காக...' - விடியோ மூலம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்
இந்த செய்தினை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்த பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:
ஜிகாதிகளின் மற்றுமொரு கொடுர செயல். அவர் எழுதிய ‘தி சடானிக் வோ்ஸஸ்’ தலைசிறந்த புத்தகம். இந்த கொடூர தாக்குதலுக்கு வார்த்தைகளின்றி தடுமாருகிறேன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.