'அவதார் 2' இந்தியாவில் வசூல் வேட்டை!
அவதார் 2 படத்தின் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அவதார் 2 படத்தின் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகுக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம்.
25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பாரிஸ் நகரில் ‘துணிவு’ போஸ்டர்!
கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியானது.
மிகப் பிரம்மண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், அவதார் 2 வெளியான10 நாள்களில் உலகளவில் இதுவரை ரூ.7,000 கோடியையும் இந்தியாவில் ரூ.300 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிவேகமாக வசூலைக் குவித்துவரும் அவதார் 2 விரைவிலேயே ரூ.10,000 கோடி வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.