திரைத்துறையில் ரஜினி என்னுடைய போட்டியாளராக இருந்துகொண்டு நண்பராகவும் இருப்பதைப் போலவே முதல்வர் மு.க.ஸ்டாலினும் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், முதல்வர் மு.க.ஸ்டாலினை, ரஜினியுடன் ஒப்பிட்டு கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
''மு.க.ஸ்டாலின் உங்களுக்கு எப்படிப்பட்டவர் என்று பலர் கேட்கிறார்கள். ஸ்டாலின் எனக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர். திரைத் துறையில் ரஜினி என்னுடைய போட்டியாளராக இருந்துகொண்டு நண்பராக இல்லையா?. அதுபோன்றுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினும்'' என்று குறிப்பிட்டார்.