முகப்பு
செய்திகள்

புதிய பட அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித் தனது புதிய படத்தின் தலைப்பை வியாழக்கிழமை வெளியிட்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

இயக்குநர் பா.ரஞ்சித் தனது புதிய படத்தின் தலைப்பை வியாழக்கிழமை வெளியிட்டார்.

அட்டகத்தி, மெட்ராஸ், காலா, கபாலி, சர்பட்டா பரம்பரை என தொடர்ச்சியான வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் திரையுலகின் தனி கவனத்தை பெற்றவர் இயக்குநர் பா.ரஞ்சித்.

இந்நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பை அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ளார். வேட்டுவம் எனப் பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படத்தின் இதர விவரங்கள் வெளியாகவில்லை.

முன்னதாக நடிகர் கமல்ஹாசனை கதாநாயகனாகக் கொண்டு புதிய படத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் விக்ரம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.