முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதியின் 50வது படத்திற்கு வில்லனாகும் ஹிந்தி இயக்குநர் 

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படத்தில் பிரபல ஹிந்தி இயக்குநர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:51 PM
பகிர்:

தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கில் கலக்கிவரும் விஜய்சேதுபதி தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். குரங்கு பொம்மை இயக்குநர் நிதிலன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. பழிவாங்கும் கதையாக உருவாகிவரும் இந்தப் படத்தில் இரண்டு புதிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு மஹாராஜா என பெயரிட்டுள்ளதாகவும் இந்தாண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது ஜவான் படத்தில் நடித்து வருகிறார். மேரி கிறிஸ்துமஸ், மும்பைக்கார், காந்தி டாக்கிஸ் படங்கள் ரிலீஸ்க்கு காத்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.