செய்திகள்

அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்: பீட்டர் பால் மறைவிற்கு வனிதா உருக்கம்

நடிகை வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் மறைவிற்கு உருக்கமான பதிவு எழுதியுள்ளார். 

DIN

நடிகை வனிதாவின் முன்னாள் கணவர் பீட்டல் பால் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு வனிதா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இரங்கல் தெரிவித்தார். 

ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தான வனிதாவிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பீட்டர்பால் என்பவருடன் கிறிஸ்துவ முறைப்படி 3வது திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. தனது யூடியூப் சேனலுக்கு உதவியதாக பீட்டர்பால் அறிமுகமாகியதாக வனிதா தெரிவித்திருந்தார். 

பின்னர் பீட்டர்பாலின் முன்னாள் மனைவி எலிசபெத் வழக்கு தொடர்ந்த நிலையில் இருவருக்கும் பிரச்னைகள் முற்றியது. மது பழக்கத்தால் பீட்டர்பால் தன்னைவிட்டு பிரிந்ததாக வனிதா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சமீபகாலமாக உடல்நலக்குறைவால் இருந்த பீட்டர்பால் தற்போது  காலமாகி உள்ளார். இதனால் வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

பிறருக்கு உதவுபவர்களுக்கு கடவுள் உதவுவார் என எனது அம்மா சொல்லி தந்துள்ளார். இது அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். வாழ்க்கையில் முக்கியமான முடிவு எடுக்க நேரம் வரும்போது நாமே நம்முடைய வழியை தேர்ந்தெடுக்க வேண்டும். இத்தனை நாள் கொடிய நோய்களுடன் போராடிய உங்களுக்கு கடைசியில் நிம்மதி கிடைத்திருக்கும். எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெய், பன்னீர் மற்றும் பால் விலைகளை குறைத்த மதர் டெய்ரி!

சிறப்பான சம்பவம்... ஐஸ்வர்யா!

தீபாவளியைத் தாண்டி வரும் தல... மறுவெளியீடாகும் அட்டகாசம்..!

ஒருவர் சதம், இருவர் அரைசதம்: முதல் நாளில் ஆஸி. ஏ அணி 337 ரன்கள் குவிப்பு!

ராகுல் காந்தி நேர்மறையான மனிதர்; ஆனால், மோடி அரசு கிரிக்கெட்டில் அரசியல் செய்கிறது! -அப்ரிதி

SCROLL FOR NEXT