செய்திகள்

சுப்ரமணியபுரம் புதிய டிரைலர் வெளியீடு

சுப்ரமணியபுரம் மறுவெளியீட்டுக்கான புதிய டிரைலரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

DIN

சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் நடிகர் ஜெய், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த இப்படம் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி வெளியானது.

சசிகுமார், ஜேம்ஸ் வசந்தன், சுவாதி ஆகியோருக்கு இது முதல் படமாகும். சமுத்திரகனி மற்றும் ஜெய்யின் திரை பயணத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது.

கண்கள் இரண்டால், மதுர குழுங்க, ஆடுங்கடா உள்ளிட்ட பாடல்களை இன்றுவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த காலகட்டத்தில் இந்தப் பாடல்கள் ஒலிக்காத நிகழ்வுகளே இல்லை என்ற வரலாறும் உண்டு.

சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி இப்படம் சில திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது.

இந்நிலையில், மறுவெளியீட்டுக்கான டிரைலரைப் படக்குழு வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT