செய்திகள்

3 தோற்றங்களில் அர்ஜுன் தாஸ்! ரசவாதி படத்தில் ஆச்சரியம் நிச்சயம்!!

நாயகன் அர்ஜுன் தாஸின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் சாந்தகுமார் மனம் திறந்துள்ளார். 

DIN

ரசவாதி திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் சாந்தகுமார் தெரிவித்துள்ள கருத்து, அவரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. 

மெளன குரு, மகாமுனி ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சாந்தகுமார். இவர் அடுத்ததாக ரசவாதி எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் - தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். வழக்கம்போல சாந்தகுமாரின் மூன்றாவது படத்துக்கும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். காதல், சண்டை, திரில்லர் என பலதன்மை கொண்ட திரைப்படமாக ரசவாதி உருவாகியுள்ளது.

ரசவாதி திரைப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நாயகன் அர்ஜுன் தாஸின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் சாந்தகுமார் மனம் திறந்துள்ளார். 

ரசவாதி படத்தில் அர்ஜுன் தாஸ் 3 விதமான தோற்றத்தில் வரவுள்ளார். 12ம் வகுப்பு மாணவனாகவும், கல்லூரி முடித்த இளைஞராகவும், நரைமுடி எட்டிப்பார்க்கும் 35 வயது சாமானியனாகவும் மூன்று விதமாக திரையில் தோன்றவுள்ளார். 

இதில் சாமானியன் பாத்திரத்தை கொடைக்கானலிலும், கல்லூரி முடித்த இளைஞர் பாத்திரத்தை மதுரையிலும் படமாக்கினோம். பள்ளி பருவ காட்சிகள் ஒரே நாளில் எடுக்கப்பட்டது. நடிப்பில் புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தும் வகையில் அர்ஜுன் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 

மேலும் நடிகை குறித்து பேசிய அவர், நடிகை தன்யா பாத்திரம் படத்தில் மிகவும் முக்கியமானது.  அவரின் பாத்திரம் குறித்து அதிகம் கூற விரும்பவில்லை. திரையில் பார்க்கும்போது அற்புதமான உணர்வை பார்வையாளர்கள் பெறுவார்கள். இவர்கள் மட்டுமின்றி விஜே ரம்யாவும் படத்தில் நடித்துள்ளார். இதுவரை பார்க்காத ரம்யாவை திரையில் காணலாம். மேலும், மலையாள நடிகர் சுஜித் ஷங்கர் படத்தின் வில்லனாக நடிக்கிறார் என இயக்குநர் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT