செய்திகள்

டிக்கெட் முன்பதிவில் அசத்தும் ஜெயிலர்!

ஜெயிலர் படத்திற்காக டிக்கெட் முன்பதிவுகள் எப்போதும் இல்லாத வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மற்றும் சிவராஜ்குமார் வில்லனாகவும் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ஆகஸ்ட் 10-ஆம் தேதி படம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முன்பதிவு நேற்று முன்தினம்(ஆக.6) இரவு தொடங்கியது. முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்குத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்ததால், காலை 4 மணி காட்சி இல்லாததால் ரசிகர்கள் ஏற்கனவே அதிருப்தியில் இருந்தனர்.

இருப்பினும், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இப்படத்தை வெளியிடும் திரையரங்குகளில் முதல்நாளுக்கான  டிக்கெட்கள் முன்பதிவு மூலம் கிட்டத்தட்ட   முடிவடையும் தருவாயில் உள்ளன. 

திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாள்கள் இருக்கும் நிலையிலும் சினிமா வட்டாரங்கள் ஆச்சரியப்படும்படி ஜெயிலர் முன்பதிவில் அசத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT