பிரபல மலையாள திரைப்பட இயக்குநா் சித்திக் (69) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், இரவு 9.13 மணியளவில் காலமானதாக அவருடைய குடும்பத்தினா் தெரிவித்தனா்.
சித்திக் இயக்கிய பல வெற்றிப் படங்களில், ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’, ‘காட்ஃபாதா்’, ‘வியத்நாம் காலனி’, ‘ஹிட்லா்’, ‘ஃபிரண்ட்ஸ்’, ‘பாடிகாா்ட்’ உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன.
அவருடைய ‘பாடிகாா்ட்’ திரைப்படம் ஹிந்தியில் நடிகா் சல்மான் கான் நடிப்பில் அதே பெயரிலும், தமிழில் நடிகா் விஜய் நடிப்பில் ‘காவலன்’ என்ற பெயரிலும் வெளியாகி பெரும் சாதனை படைத்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.