செய்திகள்

ஜெயிலர் படம் பார்த்த கேரள முதல்வர் பினராயி விஜயன்!

தமிழக முதல்வர் ஸ்டாலினைத் தொடர்ந்து ரஜினி ஜெயிலர் படத்தை கேளர முதல்வர் பினராயி விஜயனும் பார்த்து மகிழ்ந்துள்ளார்.

DIN

தமிழக முதல்வர் ஸ்டாலினைத் தொடர்ந்து ரஜினி ஜெயிலர் படத்தை கேளர முதல்வர் பினராயி விஜயனும் பார்த்து மகிழ்ந்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் மலையாள நடிகர் மோகன் லால் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் ரஜினிக்குப் பிறகு, விநாயகன் ஷிவ ராஜ்குமார் ஆகியோரின் நடிப்பும் பேசப்பட்டு வருகிறது. ஜெயிலர் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் உலக அளவில் ரூ.150 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ மாலில், குடும்பத்துடன் சென்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று இரவு ஜெயிலர் படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார். முன்னதாக இப்படத்தை பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இயக்குநர் நெல்சனை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT