நடிகர் சரத்குமாரின் 69-வது பிறந்தநாளான இன்று அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
போர் தொழில் திரைப்படத்தின் மூலம் நடிகர் சரத்குமாருக்கு தமிழ் ரசிகர்களிடையே மீண்டும் நல்ல கவனம் கிடைத்துள்ளது.
அரவிந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகனாக அமிதாஷ் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காஷ்மிரா பர்தேஷி நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான கதையாக உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ஜெயிலர் படமும் சிலை கடத்தல் தொடர்பான படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் செப்.1ஆம் நாள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.