செய்திகள்

இந்திய குடியுரிமை பெற்றார் நடிகர் அக்‌ஷய் குமார்!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்‌ஷய் குமார். 55 வயதாகும் இவர், தமிழில் ரஜினியுடனான 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். 

DIN

நடிகர் அக்‌ஷய் குமார் தான் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்‌ஷய் குமார். 55 வயதாகும் இவர், தமிழில் ரஜினியுடனான 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். 

சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஓஎம்ஜி -2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் கனடா நாட்டுரிமை கொண்டவர். 

இதற்காக அக்‌ஷய் குமார் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது இந்திய நாட்டு குடியுரிமை கிடைத்துள்ளதாக நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான ஆவணங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த செய்தியை ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றைக் காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT