செய்திகள்

இந்தியன் - 2 சிறப்புப் போஸ்டர் வெளியீடு

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் - 2 படத்தின் சிறப்புப் போஸ்டர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

DIN

கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.

லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் - 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாகவும் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று இப்படத்தின் சிறப்புப் போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

‘சேனாதிபதி’ கமல் தோற்றத்தில் வெளியான இந்தப் போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்: லூட்யன் சிலை அகற்றப்பட்ட இடத்தில் ராஜாஜிக்கு சிலை!

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

SCROLL FOR NEXT