செய்திகள்

ஜெயிலர் - வர்மனாக நடித்திருக்க வேண்டிய நடிகர் இவரா?

ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்திருக்க வேண்டிய நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.

இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஜெயிலரில் தன் எதார்த்த நடிப்பால் கொடூரமான வில்லனாக(வர்மா) திரையில் தோன்றிய  நடிகர் விநாயகன் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளார்.

இந்நிலையில், முதலில் வர்மா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் மம்மூட்டியிடம் ரஜினி பேசியதாகவும் ஆனால், சில காரணங்களால் மம்மூட்டி நடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால்,  இயக்குநர் நெல்சன் விநாயகனை அணுகியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க | பாபா குகையில் ரஜினி!

ஜெயிலரில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பிற மொழி சூப்பர் ஸ்டார்கள்  நடித்ததால் இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மம்மூட்டியும் இணைந்திருந்தால்  கொண்டாட்டமாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT