செய்திகள்

ரூ.1.70 கோடியில் சொகுசு கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

2017-ல் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் இதுவரை 5 படங்களே இயக்கியுள்ளார். ஆனால், இவர் படங்களின் தொடர் வெற்றிகளால் தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குநராக இருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் லோகேஷ் கனகராஜ் கார்கள் மீது மோகம் உள்ளவர். விக்ரம் படத்திற்கு முன் சொகுசு கார் ஒன்றை வைத்திருந்தார். அதன் வெற்றிக்குப் பின் கமல்ஹாசன் ரூ.65 லட்சம் மதிப்புள்ள லெக்ஸாஸ் கார் ஒன்றை லோகேஷ் கனகராஜ்க்கு பரிசளித்தார். 

இந்நிலையில், லியோ வெளியீட்டிற்கு முன்பே ரூ.1.70 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ(BMW) 7 வரிசையிலான கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

லோகேஷ் அடுத்ததாக ரஜினி - 171 படத்தையும் பின் ‘கைதி - 2’ படத்தையும் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT