செய்திகள்

மாமன்னன் கதை எனக்குள் இருந்த ஆதங்கம்: ஏ.ஆர்.ரஹ்மான்

மாமன்னன் 50-வது நாள் வெற்றிக்கொண்டாடத்தில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் மாமன்னன் கதை தனக்குள் இருந்த ஆதங்கம்தான் எனக் கூறியுள்ளார்.

DIN

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த மே - 29 திரையரங்குகளில் வெளியானது.

படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. மேலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, கடந்த ஜூலை - 27 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

இந்நிலையில், மாமன்னன் 50-வது நாள் வெற்றிக்கொண்டாட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘மாமன்னன் கதை 30 ஆண்டுகளாக எனக்குள் இருந்த ’ஏன் இப்படி நடக்கிறது’ என்கிற ஆதங்கம்தான். என்னால் இசைமூலமாக எதையும் செய்யமுடியவில்லை. செய்ய முடிந்தவர்களிடம் இணைந்துவிட்டேன். இவ்வளவு சிறப்பாக இப்படம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை’ எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்

திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT