செய்திகள்

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி டிரைலர் வெளியீடு! ரிலீஸ் தேதி தெரியுமா?

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN


 
அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். 

யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப்படம் அனுஷ்காவின் 48வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிரவ் ஷா ஒளிப்பதிவில் பி.மகேஷ்பாபு இயக்கத்தில் அனுஷ்கா, நவின் பாலிஷெட்டி இணைந்து நடித்துள்ளனர். 

மேலும்,  ஜெய சுதா, முரளி ஷெர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் நிறைவு பெறாததால் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT