செய்திகள்

வசூல் வேட்டைக்குக் காத்திருக்கும் துல்கர் சல்மான்!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ‘கிங் ஆஃப் கொத்தா’ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளன.

DIN

நடிகர் துல்கர் சல்மான், அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் ’கிங் ஆஃப் கொத்தா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் சார்பட்டா பரம்பரை புகழ் டேன்ஸிங் ரோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரசன்னா, செம்பன் வினோத், அனிகா சுரேந்திரன் என பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. நாளை (ஆக.24) ஓணம் வெளியீடாக  தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகிறது. 

இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், கேரளத்தின் பல பகுதிகளில் இப்படத்தின் டிக்கெட்கள், முன்பதிவுகள் மூலம் விற்றுத் தீர்ந்துள்ளன. துல்கர் சல்மான் திரைப்படங்களுக்கு இந்தியா முழுவதும் வரவேற்புள்ள நிலையில், ‘கிங்க் ஆப் கொத்தா’ வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துல்கர் நடிப்பில் இறுதியாக வெளியான ‘சீதாராமம்’ நேரடியாக ஓடிடியில் வெளியானாலும் அப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT