7ஜி ரெயின்போ காலனி - 2: நாயகியாக அனஸ்வரா ராஜன்?
செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள 7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்தின் நாயகியாக அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஜோடியாக நடித்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
சில மாதங்களாக 7ஜி ரெயின்போ காலனியின் இரண்டாவது பாகத்திற்கான திட்டத்தில் செல்வராகவன் ஈடுபட்டிருந்தார். தற்போது, கதை, திரைக்கதை பணிகள் முடிந்ததுள்ளதல் செப்டம்பர் மாத துவக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: சூர்யா - சுதா கொங்காரா படத்தின் நாயகி இவரா?
Advertisement
இப்பாகத்திலும் ரவி கிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனஸ்வரா ’சூப்பர் சரண்யா’ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்.
மேலும், இந்தாண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு அடுத்தாண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.