செய்திகள்

சந்திரமுகி - 2 படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை(ஆக.25) நடைபெறும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

DIN

சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை(ஆக.25) நடைபெறும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், லைகா புரடக்ஷன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி - 2 படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை - தோட்டா தரணி.  மேலும், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும், இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை(செப்.15) முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

இதையும் படிக்க: லியோவில் நடிகை கிரண்!

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இந்த படத்தில் மொத்தம் 10 பாடல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT